கொவிட் தொற்றாளர்கள், இறப்புகளைக் கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி விதிக்க வேண்டும் - பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம்..! - Sri Lanka Muslim

கொவிட் தொற்றாளர்கள், இறப்புகளைக் கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி விதிக்க வேண்டும் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம்..!

Contributors

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளைக் கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி விதிக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் உயர்வால், சுகாதாரத் துறை தாங்க முடியாத நிலையை நோக்கி தள்ளப்படுகிறது என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவமனை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் வீட்டில் இறக்கும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கண்டறியப்பட்ட நோயாளிகளைக் குறைப்பதற்கான ஒரே வழி பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதுதான். அத்துடன், நாளை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அடுத்த 14 நாட்களுக்கு புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்படும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, பயணக் கட்டுப்பாடுகள் தாமதமின்றி விதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team