கொஹுவலை பள்ளிவாசல் தாக்குதலை விசாரிக்க இரு பொலிஸ் குழுக்கள் - அஜித் ரோஹன - Sri Lanka Muslim

கொஹுவலை பள்ளிவாசல் தாக்குதலை விசாரிக்க இரு பொலிஸ் குழுக்கள் – அஜித் ரோஹன

Contributors

கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருல் ஸாபி பள்ளிவாசல் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முந்தினம் இரவு 11.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கற்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து பள்ளியை அண்டிய பிரதேசத்தில் வசித்துவரும் பொதுமக்களும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் ஸ்தலத்தில் திரண்டுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸ் அவசர சேவைப் பிரிவின் இலக்கமான 119 இற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொஹுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஇ பிரதேசத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசத்துக்கு சென்றுள்ளதுடன் நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து கொஹுவலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை அறிந்த கைத் தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் சம்பவம் தொடர்பிலான சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவந்தார்.

இதனை விட மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலிஇ மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வை இட்டுள்ளனர்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதுஇ பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து விசாரணை செய்ய இரு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஏற்கனவே இந்த பள்ளிவாசலில் தொழுகைகளை நிறுத்துமாறு பொலிஸார் கூறிவந்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் ஒரு குர் ஆன் மத்ரஸா என குறிப்பிட்டும் அங்கு தொழுகைகளை நடத்த அனுமதிக்க கூடாது என தெரிவித்தும் பெளத்த தேரர் ஒருவர் கொஹுவலை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவாக நேற்று முந்தினம் மாலை புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நேற்று முந்தினம் மாலை 3 மணியளவில் நடத்தப்படவிருந்த இந்த கலந்துரையாடலில் முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகள் பங்கேற்கவில்லை.
இந் நிலையிலேயே அன்றைய தினம் இரவு இந்த பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இலக்கம் 38இ கடவத்தை வீதிஇதெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக பொலிஸில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என குறிப்பிடும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர்இ பொலிஸார் இதுவிடயத்தில் ஸ்டப்படி செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கொஹுவலை பொலிஸ் நிலையத்தின் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடர்கின்றன.(v)

Web Design by Srilanka Muslims Web Team