க.பொ.த உ/த பரீட்சை திங்கள் ஆரம்பம்..! » Sri Lanka Muslim

க.பொ.த உ/த பரீட்சை திங்கள் ஆரம்பம்..!

Contributors
author image

Editorial Team

க.பொ.த உ/த பரீட்சை திங்கள் ஆரம்பம் 3,62,824 மாணவர்கள்; 2,684 நிலையங்கள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித

அனுமதி அட்டைகள் www.slexams.com தரவிறக்கம் செய்யலாம்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் அது தொடர்பில் மாணவர்களுக்கும் கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள 2,684 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 3,62,824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமக்கு இதுவரை அதற்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காதிருந்தால் விண்ணப்பதாரர் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உபயோகித்து பயிற்சி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

#minister #exam #internet #commissioner

Web Design by The Design Lanka