க.பொ.த. உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­கள் டிச -24 க்கு முன் இலங்கைப் பரீட்­சைகள் திணைக்­க­ளம். - Sri Lanka Muslim

க.பொ.த. உயர்­தரப் பரீட்சை பெறு­பே­று­கள் டிச -24 க்கு முன் இலங்கைப் பரீட்­சைகள் திணைக்­க­ளம்.

Contributors

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை
எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார அறிவித்துள்ளார் .
பரீட்சைப் பெறுபேறுகளை குறித்த திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் , அதற்கான அவசியமான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆணையாளர் நாயகத்தினால் பணிக்கப்பட்டுள்ளனர் .
இதற்கமைய , 10 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் .
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 92 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றினர் . இவர்களில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பரீட்சார்த்திகள் பாடசாலைகளிலிருந்து தோற்றியதுடன் , 45 ஆயிரத்து 240 பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியாகத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Web Design by Srilanka Muslims Web Team