க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மாதம் 28ம் திகதி வெளியிடப்படும் » Sri Lanka Muslim

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மாதம் 28ம் திகதி வெளியிடப்படும்

exam2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம் மாதம்  28 ஆம் திகதி புதன்கிழமை  வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

   விடைத்தாள்கள்  திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில்,  பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகளும் தற்சமயம்  இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   கடந்த வருடம்  டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka