சகல பிரதேச செயலாளர்களும் தங்களுக்குரிய உத்தியோக பூர்வ வாசஸ்தலங்களிலேயே தங்கியிருக்கவேண்டும் - Sri Lanka Muslim

சகல பிரதேச செயலாளர்களும் தங்களுக்குரிய உத்தியோக பூர்வ வாசஸ்தலங்களிலேயே தங்கியிருக்கவேண்டும்

Contributors

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

சகல பிரதேச செயலாளர்களும் தங்களுக்குரிய உத்தியோக பூர்வ வாசஸ்தலங்களிலேயே தங்கியிருக்கவேண்டும் என பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள்விடுத்துள்ளது.

24 மணி நேர பொதுமக்கள் சேவையை கருத்திற்கொண்டு அரசாங்கம் பல லட்சம் ரு10பாக்களைச்செலவு செய்து சுகல பிரதேச செயலாளர்களுக்கும் உத்தியோக பூர்வ வாசஸ்தலங்களை நிர்மாணித்துக்கொடுத்துள்ளது.

ஆனால் பெரும்பாலான பிரதேச செயலாளர்கள் இவற்றில் தங்குவதில்லையெனவும் இவை பாழடைந்துகிடப்பதாகவும் பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இவ்வேண்டுகோளை விடுத்துள்ளது.

உத்தியோக பூர்வ வாசஸ்தலங்களில் தங்கியிருக்காத பிரதேச செயலாளர்கள் பற்றிய விபரங்கள் தற்போது மாவட்ட மட்டத்தில் சேகரிக்கப்படுவதாகவும் அவ்வாறு தங்கியிருக்காத வாசஸ்தலங்கள் வேறு உத்தியொகத்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் Nஜான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team