சங்கா சர்வதேச அரங்கின் 50வது சதத்தை தவறவிட்டார்! - Sri Lanka Muslim

சங்கா சர்வதேச அரங்கின் 50வது சதத்தை தவறவிட்டார்!

Contributors

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது ஐம்பதாவது சதத்தை இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார இன்றைய தினம் சொந்த மண்ணிலேயே தவறவிட்டுள்ளார்.

 

தற்போது இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி ஹம்பந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்று வருகின்றது. சற்று முன்னர் 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார். சதத்தை பூர்த்தி செய்வதற்கு இன்னும் 21 ஓட்டங்கள தேவைப்படுகின்ற நிலையில் ஆட்டமிழந்து அவர்  50வது சதத்தை தவற விட்டுள்ளார்.

குமார் சங்ககார இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 16 சதங்களையும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 33 சதங்களையும் கடந்துள்ளார். எனினும் இதுவரை சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் குமார் சங்ககார சதத்தை கடக்கவில்லை.

இலங்கை அணி சார்பாக இதுவரை எந்த வீரரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் என்ற மைல் கல்லை கடக்கவில்லை. குமார் சங்ககார 49 சதங்களும் மஹே ஜயவர்தன  47 சதங்களையும் சனத் ஜயசூரிய 42 சதங்களையும் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team