சச்சினின் கடைசி டெஸ்ட் தொடங்கியது! ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் - Sri Lanka Muslim

சச்சினின் கடைசி டெஸ்ட் தொடங்கியது! ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

Contributors

இந்தியா– மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இன்றைய ஆட்டம் சச்சின் டெண்டுல்கர் விளையாடப் போகும் கடைசி போட்டி என்பதால் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் டெண்டுல்கரின் 200–வது டெஸ்ட் இது என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 200–வது டெஸ்ட் மைல்கல்லை எட்டப்போகும் முதல் வீரர் இவர் தான்.

இந்த போட்டியின் மேலும் ஒரு சிறப்பு சச்சின் விளையாட்டை பாக்க அவர் அம்மா முதல் முறையாக மைதானத்துக்கு வந்துள்ளார்கள், சச்சின் மனைவியும் அவரது மகன் அர்ஜூன் என எல்லோரும் இன்றைய சச்சினின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக வந்துள்ளனர்.

ரசிகர்களை போலவே சச்சினை ஆட்டத்தை காண அவர் குடும்பத்தினரும் ஆர்வம் மிகுந்து மைதானத்துக்கு வந்திருந்த நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி, களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

இது சச்சினின் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team