சச்சினுக்கு எம்.பி பதவி கிடைத்தது எவ்வாறு? அம்பலமானது புது தகவல் - Sri Lanka Muslim

சச்சினுக்கு எம்.பி பதவி கிடைத்தது எவ்வாறு? அம்பலமானது புது தகவல்

Contributors

சச்சினுக்கு டெல்லி மேல்சபை எம்.பி பதவி எவ்வாறு கிடைத்தது என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 2012ம் ஆண்டு யூன் முதல் டெல்லி மேல் சபை எம்.பி.யாக இருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு இந்த பதவி கிடைக்க யார் காரணம்? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவரும், மத்திய மந்திரியுமான ராஜீவ் சுக்லா கூறுகையில், மூத்த கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி அல்லது சுனில் கவாஸ்கரை எம்.பி. பதவிக்கு பரிந்துரை செய்ய நான் நினைத்தேன். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சச்சின் பெயரை சொன்னார்.

அதற்கு நான், அவர் இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறாரே என்றேன். உடனே சோனியா, இது பற்றி அவரிடம் பேசி பாருங்கள் என்றார்.

நானும் சச்சினிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தனது குடும்பத்தினரிடம் பேசி சொல்வதாக கூறினார்.

பின்னர் என்னை தொடர்பு கொண்டு இந்த யோசனைக்கு தனது குடும்பத்தினர் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்றும் அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team