சச்சினுக்கு கோயில் கட்டும் பணிகள் தீவிரம் - Sri Lanka Muslim

சச்சினுக்கு கோயில் கட்டும் பணிகள் தீவிரம்

Contributors

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோயில் அமைக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலை எதிர்வரும் 2014 ஆண்டின் முற்பகுதியில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகரும் பாடகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான மனோஜ் திவாரி சச்சினுக்காக பாபுஹ்வா மாவட்டத்தின் அட்ரவுலியா கிராமத்தில் கோயில் அமைப்பதற்குத் தீர்மானித்தார்.
அதன் முதற்கட்டமாக கடந்த வாரம் 167 சென்ரி மீற்றர் உயரமுள்ள சச்சினின் சிலை திறக்கப்பட்டது.
சுமார் 6 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் இந்திய மதிப்பின் படி 7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலை சச்சின் டெண்டுல்கர் திறந்து வைப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

‘இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றவுடன் எனது கிராமத்தில் கோயில் கட்டுவதற்கு தீர்மானித்தேன். அது இப்போதுதான் சாத்தியப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது பொது இடமாக அமையும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team