சஜித் இன்று நகைச் சுவையாளராகியுள்ளார், பெட்டை கோழிகளினால் எம்மை பயமுறுத்த எண்ணுகின்றனர்..! - Sri Lanka Muslim

சஜித் இன்று நகைச் சுவையாளராகியுள்ளார், பெட்டை கோழிகளினால் எம்மை பயமுறுத்த எண்ணுகின்றனர்..!

Contributors
author image

Editorial Team

செல்வந்த கட்சிகளுக்கு எதிராக போராடும் ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே என அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தற்போது தமது கட்சிக்கு எதிரான பல்வேறு தரப்பினரும் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹிங்குராங்கொட, புலத்திசி, தாருகா மண்டபத்தில் நேற்று (05) மாலை இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தியாக வீரர்களை நினைவுகூரும் 50 ஆவது ஆண்டு நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

´பாஸ்க்கு தாக்குதலை நடத்தியவர்கள் யார்? எதற்காக அதனை செய்தனர்? இதனை வெளிப்படுத்துவது முக்கியம். ஜனாதிபதி அமைக்கும் இவ்வாறான பெட்டை கோழிகளை ஒத்த ஆணைக்குழுக்களை அமைத்து எம்மை பயமுறுத்த எண்ணுகின்றனர். இன்று போட்டிமிகு வர்த்தகம் மனித குலத்துக்கு எதிரியாகவுள்ளது. உணவுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு காணப்பட்டது. தற்போது போட்டி அதிகரித்துள்ளது. போட்டிக்காக தரம் குறைந்த பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். தற்போது தரம் குறைந்த தேங்கா எண்ணய் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காகவே தர நிர்ணய சபை ஒன்று உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு போட்டிமிகு தன்மையால் முழு சமூகமும் பாதிப்படைகின்றது. போட்டிமிகு வியாபார முறைமை கீழ்மட்ட சமூகத்திற்கு மரணத்தை மாத்திரமே கொடுத்துள்ளது. சஜித் இன்று நகைச் சுவையாளராக மாறியுள்ளார். திரைப்படங்களில் ஒருபோதும் நகைச் சுவையாளர் கதாநாயகனுக்கு சவாலாக இருப்பதில்லை. எப்போதும் செல்வந்த கட்சிகளுக்கு எதிராக போராடும் ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே. எதிரிகள் அதனை அறிவார்கள்.´ என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team