சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சைக்கு ஆங்கிலத்தில் மாத்திரமே தோற்ற வேண்டும் - வர்த்தமானியை இரத்து செய்ய யோசனை! - Sri Lanka Muslim

சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சைக்கு ஆங்கிலத்தில் மாத்திரமே தோற்ற வேண்டும் – வர்த்தமானியை இரத்து செய்ய யோசனை!

Contributors

இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை இரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் பாராளுமன்றில் குறித்த வர்த்தமானி முன்வைக்கப்படவுள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகக்கு இணங்க இதனை தாம் பாராளுமன்றில் முன்வைப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரமே தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி முன்னாள் நீதியமைச்சர் அலி சாப்ரி, வெளியிடப்பட்டது.

எனினும் இதனை மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தாம் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாக நீதியமைச்சர் இன்று பாராளுமன்றில் கூறினார்.

எனவே, பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து தொடரும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியை பாராளுமன்றத்தின் ஊடாக ரத்துச்செய்ய முடியும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இதனை மையமாகக்கொண்டே யோசனையை தாம் அடுத்த வாரம் அதனை முன்வைப்பதாக அமைச்சர் விஜயதாச தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team