சட்டக்கல்லூரி முறைக்கேடுகள் குறித்து விசாரணை நடப்பதாக தகவல் - Sri Lanka Muslim

சட்டக்கல்லூரி முறைக்கேடுகள் குறித்து விசாரணை நடப்பதாக தகவல்

Contributors

சட்டக் கல்லூரி அதிபராக கடமையாற்றிய டபில்யு.டி.றொட்றிகோ இடைநிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டக்கல்லூரி உத்தியோகத்தர்கள் பலரினால் நிர்வாகம் மற்றும் பரீட்சைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும்

 

முறைகேடான செயல்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டக்கல்லூரியில் முக்கியமான பதவிகளில் புதியவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். சட்;டக்கல்விப் பேரவையின் தலைவர் என்ற வகையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின்  தலையீட்டையடுத்து பரந்தளவில் சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிறுவனத்தின் தொழிற்பாடுகள் பற்றி பல முறைப்பாடுகள் வந்ததினால் பிரதம நீதியரசர் விசாரணைகளுக்கு கட்டளையிட்டார்.

பரீட்சைகள் மற்றும் நிர்வாக முறைகளில் ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் கலாநிதி டபில்யு.டி.றொட்றிகோ விசாரிக்கப்பட்டார். இவர் தனக்கு பிடிக்காத மாணவர்களின் பரீட்சை பெறுவேறுகளை பழிவாங்கல் ரீதியில் குறைத்தார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தன.- தமிழ் மிரர்

குறிப்பு :அதேவேளை  இது தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப் படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team