சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையை இரு மொழிகளிலும் நடத்துமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - Sri Lanka Muslim

சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையை இரு மொழிகளிலும் நடத்துமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Contributors
author image

Editorial Team

சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சையை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் நடத்தவேண்டும் என்று அகில இலங்கை சட்ட மாணவர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதனை வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (09.09.14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

 

சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் இறுதி பரீட்சை உள்ளிட்ட மூன்று பரீட்சைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்படும்.

 

எனினும், இறுதி பரீட்சையை ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தவேண்டும் என்று கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்வி சபையினால் ஆலோசனையொன்று அண்மையில் முன்வைக்கப்பட்டது.

 

இந்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, அகில இலங்கை சட்ட மாணவர் இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுதான் அரசாங்கத்தின் இருமொழிக்கொள்கை அமுலாக்கலா? என கோஸம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு முயன்றபோதிலும் டெலிகொம் நிறுவனத்துக்கு முன்பாக பொலிஸார், வீதி தடையையே ஏற்படுத்தி பேரணியை தடுத்துநிறுத்தினர்.

 

சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை 35 வயதுக்கு மேல் இணைந்துக் கொள்ளவேண்டாம் என்று அண்மையில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த யோசனை வாபஸ் பெற்றுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (GTN)

Web Design by Srilanka Muslims Web Team