சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விருந்துபசாரத்தில் மோதல், நால்வர் படுகாயம்..! - Sri Lanka Muslim

சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விருந்துபசாரத்தில் மோதல், நால்வர் படுகாயம்..!

Contributors
author image

Editorial Team

கண்டி சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சட்டத்தரணிகள் கலந்து கொண்ட விருந்தில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று -04- அதிகாலை ஒரு மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சட்டத்தரணிகளின் உறவினர்கள் இருவர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியுள்ளது.

குறித்த மோதலின் போது ஏற்பட்ட அடிதடியில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் ஹோட்டல் ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஆபத்தான காயங்களுக்குள்ளான இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஹோட்டலின் உபகரணங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team