சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான நிலைப்பாடு » Sri Lanka Muslim

சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான நிலைப்பாடு

court

Contributors
author image

யு.எல்.எம். றியாஸ்

 .

முன்னாள் நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் மற்றும் தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு நடைமுறை தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர்பீடம் தீர்மானம் எடுத்திருக்கின்றது.

கொழும்பு புதுக்கடையில் உள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அலுவலகத்தில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அமல் ஏ.ரந்தெனிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர்,

தொழில்சார் ஆலோசனை அல்லது அபிப்பிராயம் தெரிவித்தார் என்பதற்காக நீதிபதி ஒருவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு நடைமுறையின் கீழ் நீதிசார் நடவடிக்கை மேற்கொள்வதானது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கும் நியாயாதிக்கத்திற்கும் பாதகமானதாக அமையும்.

எனவே, யாராவது ஒரு சட்டத்தரணி  தொழில்சார் ஆலோசனை அல்லது அபிப்பிராயம் தெரிவித்தார் என்பதற்காக இவ்வாறு குற்றவியல் வழக்குசார் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

Web Design by The Design Lanka