சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து யாரும் வருகை தராத காரணத்தினால் ரிஷாத் பதியுத்தீனுக்கு 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்..! - Sri Lanka Muslim

சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து யாரும் வருகை தராத காரணத்தினால் ரிஷாத் பதியுத்தீனுக்கு 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்..!

Contributors

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, குறித்த வழக்கிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து யாரும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்புகளை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team