சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 47,800 சிகரெட்டுக்கள் கைப்பற்றல் - Sri Lanka Muslim

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 47,800 சிகரெட்டுக்கள் கைப்பற்றல்

Contributors

சவுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 239 பெக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட 47,800 சிகரெட்டுக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சவுதியிலிருந்து வருகைத்தந்த ஒருவரின் பயணப் பொதியினை சோதனையிட்டபோது, இன்று காலை 11 மணியளவில் சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சிகரெட்டுக்களின் பெறுமதி 11 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவென சுங்க பேச்சாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர் பானந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லெஸ்லி காமினி மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team