சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை » Sri Lanka Muslim

சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

haj 2

Contributors

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தக் குற்றத்தைப் புரிகின்ற வெளிநாட்டவர்கள் மீதும் சவுதி பிரஜைகள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சவுதி அரசின் உள்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அதிகாரபூர்வ அனுமதிப் பத்திரம் பெறாமல் ஹஜ் தொழுகை மேற்கொண்டபோது கைரேகை அடையாளம் பதிவுசெய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரையும் கண்டுபிடித்து தண்டனை அளிக்குமாறு அமைச்சு பிராந்திய ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளது.

தவறு புரிந்தவர்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்துக்காக சவுதி பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சவுதியில் தங்கிவாழும் வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டு, திரும்பி வராமல் 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுமென பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்தும் வருடாந்தம் பெருமெண்ணிக்கையிலானவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka