சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தண்டனை: சவுதி - Sri Lanka Muslim

சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தண்டனை: சவுதி

Contributors

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையை சட்டவிரோதமாக மேற்கொள்பவர்கள் மீது அந்நாட்டு அரசு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளது.

இந்தக் குற்றத்தைப் புரிகின்ற வெளிநாட்டவர்கள் மீதும் சவுதி பிரஜைகள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சவுதி அரசின் உள்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அதிகாரபூர்வ அனுமதிப் பத்திரம் பெறாமல் ஹஜ் தொழுகை மேற்கொண்டபோது கைரேகை அடையாளம் பதிவுசெய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரையும் கண்டுபிடித்து தண்டனை அளிக்குமாறு அமைச்சு பிராந்திய ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளது.

தவறு புரிந்தவர்களை வரும் ஞாயிறன்று காவல்நிலையங்களுக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்துக்காக சவுதி பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அதேநேரம், சவுதியில் தங்கிவாழும் வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டு, திரும்பி வராமல் 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.bbc

Web Design by Srilanka Muslims Web Team