சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் நடந்தது என்ன? » Sri Lanka Muslim

சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் நடந்தது என்ன?

20180425_071914

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Fauzana Binth Izzadeen


திருகோணமலை இந்து மகளீர் கல்லூரியில் பணியாற்றும் முஸ்லீம் ஆசிரியைகள் இவ்வளவு காலமும் சாரியுடன் ஹிஜாப் அணிவதையே வழக்கமாக கொண்டிருந்ததை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். ஒவ்வொரு முஸ்லீம் ஆசிரியையும் நியமனம் பெற்று பொறுப்பெடுக்கும் தினத்தில் சாரியே அணிந்து வர வேண்டும் என்றும் அபாயா அணியக் கூடாதென்றும் வற்புறுத்தப்படுவதுண்டு.

பாடசாலை ஆசிரியைகளுக்கான சீருடை ஒன்றை வடிவமைப்பதாக சொல்லி பல வருடங்களாக அந்த ஆசிரியைகள் சாரி அணிவிக்கப்பட்டதே உண்மை.ஆனால் அதிபரின் வாக்குறுதிக்கமைய பல வருடங்களாகியும் அவ்வாறான சீருடையொன்று வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பை போலன்றி ஆண் ஆசிரியர்கள் குறிப்பாக முஸ்லீம் ஆண்கள் பலர் குறித்த பாடசாலையில் நியமனம் பெற்றதை தொடர்ந்து அந்த ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் காரணமாக இரண்டாம் தவணை (23/4/18) முதல் அபாயா அணிவதற்காகவே அதிபரிடம் அனுமதி (22/4/18 அன்று) கோரியிருந்தனர்.அதற்கு எதிர்வினையாற்றும் மோசமான விளைவாகவே இப்போதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது .

தமக்கு விரும்பிய ஆடையை அணியும் சுதந்திரம் உள்ளதொரு நாட்டில் இத்தனை வருடங்களாக சீருடை வடிவமைப்பு என போலியாக ஏமாற்றப்பட்டு அடக்கப்பட்ட சிலர் தம் தவறுணர்ந்து நேர்வழி பெற அனுமதி கேட்கப்பட்ட நிலையில் “இத்தனை காலம் இல்லாத ஞானம் இப்போதெப்படி?” என குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது.

இந்து,பௌத்த பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கே அரசாங்கம் பர்தா தைப்பதற்காக பிரத்தியேகமாக துணி வழங்கப்படும் நிலையில் கல்வி அமைச்சினதோ வேறு எங்குமோ சுற்று நிரூபங்களில் குறிப்பிடப்படாத வகையில் ஆசிரியைகள் தமது கலாச்சாரத்தை பின்பற்ற இவ்வளவு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே திருகோணமலையில் St Joseph கல்லூரியிலேயே (ஒரு காலத்தில் கிறிஸ்தவ மிஷனரி என்பதை கவனிக்க)ஆசிரியைகள் அபாயா அணிய அனுமதிக்கப்பட்டிருக்க ,இந்து பாடசாலையில் அதற்கு அனுமதி கேட்ட நிகழ்வு திரிபு படுத்தப்பட்டு பிரச்சினை திசை திருப்பப் பட்டிருக்கிறது.பதாகைகளில் அப்பட்டமாய் இனவாதம் உமிழப்பட்டிருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அபாயா என்பதெல்லாம் பொய்தான்.வேறு ஒரு மறைகரம் இருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.என்னதான் ஒரு பெரும்பான்மையால் தான் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தாலும் தனக்கு முன்னிருக்கும் சிறுபான்மையை மிதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் வரலாறெல்லாம் மறந்துதான் போகிறது.தமிழனும் இதற்கு விதிவிலக்கல்ல.

Web Design by The Design Lanka