சண்முகா கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் » Sri Lanka Muslim

சண்முகா கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம்

face

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சற்று முன்னர் நடந்த கல்வி அதிகாரிகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து சண்முகா பாடசாலையின் 5 ஆசிரியைகளும் நிரல் அமைச்சின் முடிவு வரும் வரைக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்கள். முடிவு வராது.ஒரு இந்துப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியை ஹபாயா அணிந்து செல்ல முடியாது.இதுதான் இனி முடிவு.திட்டம் போட்டு அந்த ஆசிரியைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

ஆசிரியைகளுக்கு சாதகமாக முடிவுகள் வருமிடத்து ஒரு இனக்கலவரம் வர வாய்ப்பிருக்கிறது என்று மேலிடத்திற்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு முஸ்லிம் ஆசிரியை தனது கலாச்சார ஆடையை அணிந்து வர முடியாத கையறு நிலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கூட்டுச் சேர்ந்து நிற்கும் அந்தக் கோமாளிகள் எங்கே?

கல்வி அமைச்சரோடு கை கோர்த்து நிற்கும் முஸ்லிம் கெபினட் அமைச்சர்கள் எங்கே?

இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கம் எங்கே?

ஜம்மியதுல் உலமா எங்கே?

முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் எங்கே?

ஏன் எமது உரிமைகள் மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தலை குனிந்து முகத்தில் கரி பூசப்படும் வரைக்கும் மௌனித்து நிற்கிறோம்?

எமது நியாயமான உரிமைகளுக்காக ஜனனாயக ரீதியாக போராடுவதற்கு நாம் தயங்கக் கூடாது.இதை அனுமதித்தால் இதையே காரணம் காட்டி பாடசாலைகளுக்குச் செல்லும் அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளின் கலாச்சார ஆடைகளும் களையப்படும்.அதற்கு சண்முகா கல்லூரி ஒரு உதாரணமாகப் போகும்.

எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்.இந்த நாடு எமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளை எவருக்காகவும் இழந்து விடாதீர்கள்.

இலங்கையில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு ஒரு சில முஸ்லிம் ஆசிரியைக்குத் தானே நடக்கிறது எனக்கில்லையே என்று சுயனலமாக இருக்காதீர்கள்.

மெதுமெதுவாக அனைத்து அடையாளங்களை இழக்க ஆரம்பித்திருக்கிறோம்.மிகப்பெரிய படுகுழி ஒன்று முன்னே தெரிகிறது.

எல்லோரும் சேர்ந்து இதனை வென்றெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் எதிர்காலம் மிகப் பெரும் சூனியமாகிவிடும்.

Web Design by The Design Lanka