சத்தமாக அழுது தீர்த்திர்க்கும் மாணவர்களின் கவனத்திற்கு » Sri Lanka Muslim

சத்தமாக அழுது தீர்த்திர்க்கும் மாணவர்களின் கவனத்திற்கு

school1

Contributors
author image

Mujeeb Ibrahim

AL பரீட்சை பெறுபேறுகளின் வெற்றியால் பல தம்பி தங்கையர் மகிழ்வில் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
மறுபுறம் இலக்குத்தவறிய தம்பி தங்கையரின் வருத்தமும் அதன் அடியொட்டி எழுகிற விசும்பல்களும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
சிலர் சத்தமாக அழுது தீர்த்திருப்பார்கள்.

பலர் இன்னும் மெளனமாக அழுதுகொண்டிருப்பர்.
துயரத்தை அழுது கரைத்து விடுங்கள்.
ஆனால் கவலை வேண்டாம்.

உங்களது இலக்கு அப்படியேதான் இருக்கிறது.
எய்து முடித்து குறி தவறி இருப்பது ஒரு அம்புதான்.
இன்னும் இரண்டு அம்புகள் இருக்கின்றன.
இனித்தான் நீங்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

எஞ்சியிருக்கிற உங்கள் இரண்டு அம்புகளாலும் உங்களது இரண்டு கண்களையும் குத்திவிட்டு வேறொரு பக்கம் உங்களை கூட்டிச்செல்ல ஒரு கூட்டம் திரிகிறது.
அவதானம் பிள்ளைகளே….

இன்ஸ்டன்ட் நூடில்ஸ் போன்ற திட்டங்களுக்கு பலியாகி எதிர்காலத்தை தொலைத்துவிடாதீர்கள்.

இன்னும் இருக்கிற இரண்டு அம்புகளையும் உங்கள் இலக்கு நோக்கி பொருதுவதற்கு தயாராகுங்கள்.

Web Design by The Design Lanka