சந்­தி­ரிகா தலை­மையில் கொழும்பில் விசேட கருத்­த­ரங்கு - Sri Lanka Muslim

சந்­தி­ரிகா தலை­மையில் கொழும்பில் விசேட கருத்­த­ரங்கு

Contributors

தெற்­கா­சி­யாவில் பன்­மு­கத்­தன்­மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் கலந்­து­ கொள்ளும் விசேட கருத்­த­ரங்கு ஒன்று நாளை செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு பண்டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது என்று அறிவிக்கப்படுகிறது.

 

தெற்­கா­சிய கொள்கை மற்றும் ஆய்வு நிறு­வ­னத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த நிகழ்வு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. அத்­துடன் இந்தக் கருத்­த­ரங்கில் பேரா­சி­ரியர் ராதிகா குமா­ர­சு­வாமி, இந்­தி­யாவின், பேரா­சி­ரியர் ரஜீவ் பார்­கவா, பிரான்ஸ் நாட்டின் கலா­நிதி கிறிஸ்­டோபி ஜெப்­ரீலோட் பாகிஸ்­தானின் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

 

அமை­தி­யான ஒத்­தி­ணங்­கிய வாழ்வு, மத சகிப்­புத்­தன்மை பன்மை சமூ­கங்கள் போன்ற தலைப்­புக்­களில் உரை நிகழ்த்­தப்­ப­ட­வுள்­ளன. மதங்­க­ளுக்கு இடையில் பிணக்­குளை உரு­வாக்கும் செயற்­பா­டு­களை எவ்­வாறு தவிர்ப்­பது என்­பது தொடர்­பாக கருத்­த­ரங்­களில் விரி­வாக ஆரா­யப்­படும்.

 

கருத்­த­ரங்கில் பங்­கு­பற்ற ஆர்­வ­முள்­ள­வர்கள் 0112576666 மற்றும் 0112576555 என்ற தொலை­பேசி இலக்­கங்­களின் ஊடாக தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் info@thesapri.org என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

Web Design by Srilanka Muslims Web Team