சந்­தையில் பால்மா வகை­க­ளுக்­கான தட்­டு­பாடு ஏற்­பட்­டுள்­ள­மைக்கு கார­ண­ம்....... - Sri Lanka Muslim

சந்­தையில் பால்மா வகை­க­ளுக்­கான தட்­டு­பாடு ஏற்­பட்­டுள்­ள­மைக்கு கார­ண­ம்…….

Contributors

உலக சந்­தையில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள பால் மாவின் விலை­க­ளுக்கு நிக­ராக இலங்கை சந்­தையில் தமது உற்­பத்­தி­களை விற்­பனை செய்ய முடி­யாத கார­ணத்­தினால் இலங்­கையில் பால்மா இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னங்கள் தமது இறக்­கு­ம­தியை குறைத்­துள்­ள­மையே உள் நாட்டு சந்­தையில் பால்மா வகை­க­ளுக்­கான தட்­டு­பாடு ஏற்­பட்­டுள்­ள­மைக்கு கார­ண­மாகும் என்று நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

 

சந்­தையில் நிலவும் பால்மா தட்­டுப்­பாடு நிலைமை தொடர்­பாக நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபையின் உயர் அதி­காரி ஒரு­வ­ருடன் வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

இன்று நாட்டின் சந்­தை­களில் பால்மா வகை­க­ளுக்கு பாரிய தட்­டுப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இதற்கு பிர­தான கார­ண­மாக அமை­வது நாட்டில் உள்ள முன்­னணி நிறு­வ­னங்கள் தமது இறக்­கு­ம­தி­யினை குறைத்­த­மை­யாகும். காரணம் இன்று உலக சந்­தையில் பால் மா வகை­களின் விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் இந்­நி­று­வ­னங்கள் உள்­நாட்டில் பால் மா வகை­களின் விலை­யினை அதி­க­ரிக்க கோரி தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றன. எனினும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை­யினால் அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

காரணம் உலக சந்­தையில் பால்மா வகை­களின் விலைகள் தற்­போது அதி­க­ரித்­தி­ருந்த போதிலும் எதிர்­வரும் சில காலங்­களில் விலை குறை­வ­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் உள்­நாட்டு சந்­தையில் பால்மா வகை­களின் விலை­யினை தற்­போது அதி­க­ரித்தால் உலக சந்­தையில் விலை வீழ்ச்­சி­ய­டையும் போது எமக்கு விலை­யினை குறைக்க நட­வ­டிக்கை எடுக்க முடி­யாமல் போய்­விடும்.

எமது நாட்டின் மாதாந்த பால் மா நுகர்வு 6000 மெட்ரிக் தொன் ஆக காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் நவம்பர் மாதத்தில் நாட்­டிற்கு 3000 மெட்ரிக் தொன்பால் மா இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது. இது மொத்த தேவையின் 50 வீத­மாகும். மிகுதி 50 வீத தேவை­யினை உள்­நாட்டு உற்­பத்­தியை கொண்டு பூர்த்தி செய்ய வேண்­டிய நிலை எமக்கு ஏற்­பட்­டது. ஆனாலும் அது சாத்­தி­ய­மற்ற ஒரு விட­ய­மாகும். காரணம் உள்­நாட்டில் ஐலன்ட் பெல்­வத்த நெஸ்லே, போன்ற உற்­பத்­திகள் மாத்­தி­ரமே பிர­தா­ன­மா­ன­தாக இருக்­கின்­றன. ஆயினும் இவை உள்­நாட்டு பால்மா தேவை­களை பூர்த்தி செய்ய போது­மா­ன­தல்ல. இவ்­வா­றான நிலையில் ஐலன்ட் பால்மா வினை இலங்கையில் உற்­பத்தி செய்யும் பால்மா நிறு­வன ஊழி­யர்கள் மேற்­கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் கார­ண­மாக இந்­நிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த சந்தர்ப்பத்தில் பதுக்கல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற் கொண்டு வருகின்றது என்றார்.(v)

Web Design by Srilanka Muslims Web Team