சந்திரசேகரம் ராஜனின் முயற்சியால் பனங்காடு பிரதேச வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது..! - Sri Lanka Muslim

சந்திரசேகரம் ராஜனின் முயற்சியால் பனங்காடு பிரதேச வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது..!

Contributors

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு 24 மணிநேரமும் இயங்க முடியாத நிலையில் உள்ளதையும், மேலும் பல குறைகளுடன் இயங்கிவரும் வைத்தியசாலையின் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்துதருமாறு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனுக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது விடயம் தொடர்பில் மாத்தளை மாநகரசபை முதல்வர் சந்தனம் பிரகாசின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சரது அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்தித்து கலந்துரையாடியதன் பலனாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை 24 மணிநேரமும் இரவுபகலாக இயங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வைத்தியசாலை சீராக இரவு நேரத்திலும் இயங்குவதற்கு வைத்தியர்கள் தங்கியிருக்க முடியாத நிலை நிலவுகிறது கூடவே வைத்தியர் பற்றாக்குறையும் நிலவுகிறது இதனை நிவர்த்திசெய்து தருமாறு கோரும் மகஜரை அமைச்சரிடம் கையளித்து கலந்துரையாடியதாகவும் வைத்தியசாலையில் இரவில் வைத்தியர் தங்கியிருந்து அவசரசிகிச்சைப்பிரிவை 24 மணிநேரமும் இயக்கவைக்க வேண்டுமென தான் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அதனை உடனடியான சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்த அமைச்சர் உடனடியாக வைத்தியரொருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அன்றே அவசர சிகிச்சைப்பிரிவை 24 மணிநேரமும் இயங்கவைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் இந்த சந்திப்பின் போது உத்தரவிட்டார். அதன்படி அன்றிரவே அவசர சிகிச்சைப்பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக சந்திப்பின் பின்னர் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் நீர்பாசன அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன, மத்தியமாகாண ஆளுநர் லலித் யு கமகே, மாத்தளை முதல்வர் ச.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team