சந்திரிகா - பிரபாகரன் விரும்பியதால்தான் சமாதானப் பேச்சுக்கு இறங்கினோம் – எரிக் சொல்ஹெய்ம்..! - Sri Lanka Muslim

சந்திரிகா – பிரபாகரன் விரும்பியதால்தான் சமாதானப் பேச்சுக்கு இறங்கினோம் – எரிக் சொல்ஹெய்ம்..!

Contributors
author image

Editorial Team

இலங்கையில் உள்நாட்டு போர் உச்சம் பெற்றிருந்த தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பத்துடன் தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களில் நடுநிலைமை வகித்தது என நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது : “இலங்கைக்கான சமாதான அனுசரணைப் பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விரும்பினார்.

இருந்த போதிலும் இந்த அனுசரணைப் பணியில் நோர்வேயே பங்கெடுக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அடிப்படையிலேயே நோர்வே இந்த பேச்சுவார்த்தையில் இறங்கியது.

இதற்காக 1998 ஆம் ஆண்டு நோர்வேயில் உள்ள எனது அலுவகத்துக்கு நேரில் வருகை தந்த தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பினர் என்னிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்” எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

அதேநேரம், நோர்வேயின் தலையீட்டுடன் நாட்டில் அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team