சந்தேகத்துக்கு இடமான 6500 அடையாள அட்டை விண்ணப்பங்கள் - Sri Lanka Muslim

சந்தேகத்துக்கு இடமான 6500 அடையாள அட்டை விண்ணப்பங்கள்

Contributors

கடந்த வருடத்தில் அடையாள அட்டைக்காக கிடைக்கப்பெற்றிருந்த விண்ணப்பங்களுள், சந்தேகத்துக்கு இடமான விண்ணப்பங்கள் என்று 6500 பேரின் விண்ணப்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

போலியான தகவல்கள் மற்றும் ஆவனங்களை வழங்கி இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரையில் 23 விண்ணப்பங்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றை குற்றத்தடுப்பு பிரிவிற்கு வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team