சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு – வாடகை பணம் செலுத்தவில்லையாம்! - Sri Lanka Muslim

சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு – வாடகை பணம் செலுத்தவில்லையாம்!

Contributors

செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.  வேன் சாரதி ஒருவரால் கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு இன்று (14) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேனில் வந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் அதற்கான வாடகை பணத்தை கொடுக்கவில்லை எனத் தெரிவித்தே வேன் சாரதி முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் இருந்து ரயிலில் வவுனியா சென்ற செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  அதனால் அநுராதபுரத்தில் இருந்து செனல் 4 ஊடகவியலாளர்கள் வேனில் கொழும்பு நோக்கிச் சென்றனர்.
எனினும் அவர்கள் பயணித்த வேனுக்கான வாடகை பணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அதன் சாரதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-adaderna

Web Design by Srilanka Muslims Web Team