சனல் 4 நம்பிக்கையை இழந்துவிட்டதாக முத்தையா முரளிதரன் குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

சனல் 4 நம்பிக்கையை இழந்துவிட்டதாக முத்தையா முரளிதரன் குற்றச்சாட்டு

Contributors

சனல் 4 தொலைக்காட்சி தமது நம்பகத்தன்மையை இழந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சனல்4 குழுவினர், இலங்கைக்கு வந்திருந்தபோது வழங்கிய செவ்வி செம்மைப்படுத்தப்பட்டு ஒளிபரப்பட்டமை காரணமாக தமது கருத்துக்கள் தவறாக வெளியாகியுள்ளதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

45 நிமிடங்கள் வரையில் தம்முடன் நடத்தப்பட்ட செவ்வியை 3 நிமிடங்களுக்குள் ஒளிபரப்பியமையானது ஊ;டக ஒழுங்குக்கு எதிரான விடயம் என்றும் முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்முடன் மேற்கொள்ளப்பட்ட செவ்வியை முழுமையாக ஒளிபரப்புவதற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள் முன்னதாக இணக்கம் வெளியிட்டதாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

தமது செவ்வி முழுமையாக ஒளிபரப்பப்பட்டிருக்குமானால் தமது உண்மையான கருத்துக்கள் வெளியாகியிருக்கும் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெமரோன் முன்னால் 20-30 தாய்மார் சென்று அழுதால் அதனை எவ்வாறு நம்புவது என்று முரளிதரன் கேள்வி எழுப்பியதாக சனல் 4 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.lw

Web Design by Srilanka Muslims Web Team