சனிக்கிழமை கொழும்பில் பாத்திமா FM ஒலிபரப்பு! - Sri Lanka Muslim

சனிக்கிழமை கொழும்பில் பாத்திமா FM ஒலிபரப்பு!

Contributors
author image

பிறவ்ஸ் முஹம்மட்

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும், பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “பாத்திமா FM” நாளை சனிக்கிழமை 103.1 அலைவரிசையில் ஒலிபரப்பாகவுள்ளது. பாடசாலை வளாகத்திலிருந்து ஒலிபரப்பாகும் இந்த வானொலி நிகழ்ச்சிகளை கொழும்பிலிருந்து 15 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் உள்ள நேயர்கள் செவிமடுக்க முடியும்.

 

சனிக்கிழமை காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை பாடசாலை மாணவிகள் நிகழ்ச்சிகளை நேரடியாக தொகுத்து வழங்கவுள்ளனர். முழுக்க முழுக்க இஸ்லாமிய நிகழ்ச்சிகளைத் தழுவி, பாடசாலை மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவிகள் மற்றும் வானொலியைக் கேட்டும் அனைத்துப் பெண்களும் இந்த வானொலி நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட முடியும். மேலதிக விபரங்களுக்கு www.facebook.com/Fathimafm103.1 என்ற பேஸ்புக் வாயிலாக இணைந்துகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

 

இதே தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹஜ் கண்காட்சியும் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இக்கண்காட்சியை அனைத்து பெண்களும் கண்டுகளிக்க முடியும். அத்துடன் ஆண்களின் வருவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team