சனிக்கிழமை, 26 ஆம் திகதி சகல முஸ்லிம் பாடசாலைகளும் நடைபெறும்..! - Sri Lanka Muslim

சனிக்கிழமை, 26 ஆம் திகதி சகல முஸ்லிம் பாடசாலைகளும் நடைபெறும்..!

Contributors

(ஏ.எல்.ஜுனைதீன்)

ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நோக்கமாக கடந்த 17 ஆம் திகதி மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஹஜ்ஜுப் பெருநாள் கடந்த 16 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்பட்டதன் காரணமாக சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் பெருநாள் தினத்திற்கு அடுத்த தினமான 17 ஆம் திகதி வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கடந்த 17 ஆம் திகதி மூடப்பட்ட சகல முஸ்லிம் பாடசாலைகளுக்குமாக பதில் பாடசாலை நடத்த வேண்டிய நாள் 26 ஆம் திகதி சனிக்கிழமை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team