சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருக்கும் எரிபொருள் நவம்பர் 11ஆம் திகதி மட்டுமே போதுமானது- இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தொழிற்சங்கங்கள்..! - Sri Lanka Muslim

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருக்கும் எரிபொருள் நவம்பர் 11ஆம் திகதி மட்டுமே போதுமானது- இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தொழிற்சங்கங்கள்..!

Contributors
author image

Editorial Team

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருக்கும் எரிபொருள் கையிருப்பானது எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை மாத்திரமே போதுமானது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எரிபொருளை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியே மீண்டும் வரவுள்ளது எனவும் தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

எரிபொருள் நெருக்கடி இருப்பதாகவும் அதனை அடுத்த சில தினங்களில் தெளிவாக காணக் கூடியதாக இருக்கும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாட்டைப் பற்றி நினைத்து, இந்தத் தகவலை வெளியி டாது இருப்பதற்கு எந்தளவுக்கு முயற்சித்தாலும் அதனை மேலும் சில தினங்களுக்கு மாத்திரமே செய்ய முடியும் என வணிக கைத்தொழில் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கூட்டுத்தாபனக் கிளையின் தலைவர் பந்துல சமன்குமர தெரிவித் துள்ளார்.

அடுத்த சில தினங்களுக்கு தேவைப்படும் போதுமான மசகு எண் ணெய் இல்லாத காரணத்தினால், சப்புகஸ் கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் எண்ணெய் சுத்திகரிப்பு வேகம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்த போதிலும் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிய கப்பல் இலங்கை வந்ததாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team