சமாதான நீதவானாக M.ரிஸ்வி ஹுசைன் சத்தியப்பிரமாணம்! - Sri Lanka Muslim

சமாதான நீதவானாக M.ரிஸ்வி ஹுசைன் சத்தியப்பிரமாணம்!

Contributors

புத்தளத்தை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட, மர்ஹூம் அல்ஹாஜ் அமானுல்லாஹ் அவர்களின் புதல்வருமான (புத்தளம் ஹமீட் உசேன்) அமானுல்லா M.ரிஸ்வி ஹுசைன், நேற்று  (12.08.2022) அகில இலங்கை சமாதான நீதவானாக, கண்டி நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமானுல்லா M. ரிஸ்வி ஹுசைன் சிறந்த சமூக சேவையாளரும், பிரபல நிறுவனம் ஒன்றில் கட்டிடக் கலைஞராக பணியாற்றி வருபவருமாவார்.

மும்மொழிகளிலும் சிறந்த ஆற்றல் கொண்ட ரிஸ்வி ஹுசைன், இனங்களுக்குடையிலான ஒற்றுமை தொடர்பில் சிறந்த ஆளுமையினை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team