சமுதாயத்தின் குரல் இன்று ஒலித்தது சர்வதேச முஸ்லிம்களினால் வாழ்தப்படும் தலைவர் ரிஷாட்..! » Sri Lanka Muslim

சமுதாயத்தின் குரல் இன்று ஒலித்தது சர்வதேச முஸ்லிம்களினால் வாழ்தப்படும் தலைவர் ரிஷாட்..!

Contributors
author image

பைஷல் இஸ்மாயில்

சமுதாயத்தின் குரல் இன்று ஒலித்தது என சர்வதேச முஸ்லிம்களினால் வாழ்த்தப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுத்தீனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் சமூக வலயத்தளங்கள் ஊடாக குவிந்து வருகின்றன.

முஸ்லிம்களின் தலைவா நீ வாழ்க! எம் குரல் என்றும் பாராளுமன்றத்தில் எங்கள் சார்பில் ஒலிக்க வேண்டும். நாம் என்றும் உன் பாதையில் பயணிப்போம். யாருக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டு அல்லாஹ் ஒருவனுக்கு பயந்து வாழும் எம் தலைவனின் அரசியல் பயணம் தொடரவும், அவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து வாழுகிறார்.

அவரின் குரலை நசுக்குவதற்காக பல சதித் திட்டங்களும், குற்றச் சோடிப்புக்களும் தீட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அதற்குக் கூட அஞ்சாது என்னைப்படைத்த இறைவனுக்கே தான் அஞ்சி நடப்பேன். என் மூச்சு இருக்கும் வரை முஸ்லிம் சமூகத்துக்காக என் குரல் என்றும் ஒலிக்கும் என பல இடங்களில் பேசி வருபவர்.

அதன் வெளிப்பாட்டை நேற்றய தினம் பாராளுமன்ற உரையிலும் வெளிப்படுத்திக் காட்டினார் என்று போற்றப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka