சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பினால் சட்ட நடவடிக்கை » Sri Lanka Muslim

சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பினால் சட்ட நடவடிக்கை

social-media

Contributors
author image

Editorial Team

சமூக வலைத்தளங்கள் மூலம் மதவாதம் மற்றும் இனவாத ரீதியான கருத்துக்களை பதிவு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மதவாதம் மற்றும் இனவாதம் பரப்புவோர் குறித்து விசேட பொலிஸ் பிரிவின் ஊடக விசாரணை நடத்தப்படும்.

குற்றம் செய்தவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka