சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது - அரசாங்கம் தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம் தெரிவிப்பு..!

Contributors

சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதிப்பதில்லை என அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் எரிபொருட்கள் விலை உயர்வு தொடர்பில் அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team