சமையல் எரிவாயு கேட்டு அப்பக் கடைக்காரர் வீதிக்கு இறங்கி போராட்டம்..! - Sri Lanka Muslim

சமையல் எரிவாயு கேட்டு அப்பக் கடைக்காரர் வீதிக்கு இறங்கி போராட்டம்..!

Contributors

– என்.ஆராச்சி –

தெரணியகல நகரில் அப்பம் கடையொன்றை நடத்தி வரும் நபர் ஒருவர், சமையல் எரிவாயு கோரி, வீதிக்கு இறங்கி போராட்டம் ஒன்றை இன்று (16) முன்னெடுத்தார்.

குறித்த அப்பக் கடை வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இவர்,கடந்த பல வாரங்களாக தமக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றும் இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது அப்பக் கடை மூடப்பட்டுள்ளதால், தமக்கு எவ்வித வருமானமும் இல்லை என்பதுடன், இதனால் நோயாளியான தனது தாய்க்கு சிகிச்சை செய்வதற்கு கூட பணமில்லை என தெரிவித்து, நகர மத்தியில், வெற்று சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team