சம்மாந்துறையில் அண்டிஜன் பரிசோதனை..! - Sri Lanka Muslim
Contributors

சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்


நாட்டிலும், கிழக்கிலும் பரவலாக பரவிவரும் கோரோனோ அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த வியாழக்கிழமை (06) சம்மாந்துறை பிரதேச வீதியோர வியாபாரிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடும்  இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர்,முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் வழிகாட்டுதலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் தலைமையில்  பொது சுகாதார பரிசோதகர்கள் சீ.bபீ.எம். ஹனீபா,எம்.றஜ்குமார், எம்.ஐ.எம். ஹனீபா,பீ. இலங்கோ உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.

Web Design by Srilanka Muslims Web Team