சம்மாந்துறையில் கொரோனா சிகிச்சை விடுதி திறக்கப்பட்டது..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் கொரோனா சிகிச்சை விடுதி திறக்கப்பட்டது..!

Contributors
author image

ஐ.எல்.எம் நாஸிம்

ஐ.எல்.எம். நாஸிம்,நூருல் ஹுதா உமர்,

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா நோயாளர்களுக்கான அதி தீவிர கண்காணிப்பு பிரிவும் மற்றும் பிரத்தியேக விடுதியும் இன்று (30) வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நோயாளர் விடுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் கலந்து கொண்டு விடுதியை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

         

Web Design by Srilanka Muslims Web Team