சம்மாந்துறையில் கொரோனா ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதை தவிசாளர் நௌசாட் தடுத்தாரா..? - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் கொரோனா ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்வதை தவிசாளர் நௌசாட் தடுத்தாரா..?

Contributors

கொரோனாவினால் மரணிக்கும் நபர்களுடைய ஜனாஷாக்களை அரசாங்கம் எரித்துக் கொண்டே இருந்தது. இதனைத் தடுத்து ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்யும் அனுமதியைப்பெற நாட்டிலுள்ள மக்களும், அரசியல்வாதிகளும் பல்வேறு போராட்டங்கள் செய்து, பிரார்தனைகள் செய்து, பல தியாகங்களுக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யும் அனுமதியைப் பெற்றுள்ளனர்.

இந்த ஜனாஷாக்களை இரணைத்தீவில் நல்லடக்கும் செய்யுங்கள் என அரசாங்கம் பரிந்துறை செய்தும்  அங்கு வாழும் மக்களின் எதிர்பினால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இடங்களைத் தெரிவு செய்யும் வேலைத்திட்டம் நடைபெற்று  ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளரின் அனுமதியுடனும் தனவந்தர் ஜௌபரின் 03 ஏக்கர் காணி நன்கொடையாக வழங்கியதன் மூலமும் நேற்று முதன் முறையாக கொரோனா ஜனாஷாக்கள் ஓட்டாமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது போலவே சம்மாந்துறை, இறக்காமம் போன்ற ஊர்களிலும் ஜனாஷாக்களை நல்லடக்க செய்ய பொருத்தமான இடங்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.  இதனை ஏற்றுக் கொண்ட இறக்காமம் தவிசாளர், உறுப்பினர்கள்,  ஊர் நம்பிக்கையாளர்களின் அனுமதியுடன் இடம் வழங்கப்பட்டு இறக்காமத்திலும் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்ய தவிசாளரினால் அனுமதி வழங்கப்படவில்லையா.?

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் MIM மன்சூர் நேற்று இரவு அவருடை சமூக வலைத்தளப் பக்கத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் கொரோனா ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை என வெளிப்படையாகவே பதிவிட்டுள்ளார். சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு நபரினுடைய ஜனாஷாவும் 85 நாட்களாக நல்லடக்கம் செய்யப்படாமல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்காமல் தடுப்பது சிறந்ததா?

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் வாபாத்தான பல்லாயிரக்கணக்கான ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்து இன்றுவரை போற்றப்படும் சம்மாந்துறை மண்ணின் நாமம் தவிசாளரின் இந்த நடவடிக்கையால் மழுங்கடிக்கப்படுகின்றதா?

Web Design by Srilanka Muslims Web Team