சம்மாந்துறையில் தினசரி பி.சி.ஆர், அண்டிஜன் பரிசோதனைகள் : இரவு பகல் பாராது களத்தில் சுகாதாரதுறை..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் தினசரி பி.சி.ஆர், அண்டிஜன் பரிசோதனைகள் : இரவு பகல் பாராது களத்தில் சுகாதாரதுறை..!

Contributors

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வீதிகளில் உலாவித்திரிந்த்தோர் 60 பேருக்கு எழுமாறாக இன்று (14 ) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் ஆலோசனையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் வழிகாட்டுதலில் மேற்பார்வை பரிசோதகர் ஐ.எல் றாஸிக் தலைமையில் சுகாதார பரிசோதகர்களான சி.பி.எம் ஹனீபா,எம் இலங்கோவன்,பி,இலங்கோ,எம்.றாஜ்குமார்,டி.டினேஷ்,எம்.ஐ.எம் ஹனிபா மற்றும் பொலிஸார் பங்களிப்புடன் இடம் பெற்றது.

மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மாதிரிகள் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பட்டுள்ளாதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து இன்று (14) வரை 32 கிராம சேவையாளர் பிரிவுகளில் மொத்தமாக 215 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில்
சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 08 மரணங்களும் சம்பவித்துள்ளதாகவும் தினசரி பி.சி.ஆர் ,அண்டிஜன் போன்ற பரிசோதனைகள் சுகாதார சுறையினர் மேற்கொண்டு வருவதாகவும் எதிர் வரும் காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் எமது பிராந்தியத்தில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team