சம்மாந்துறையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (29) ஆரம்பம்..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (29) ஆரம்பம்..!

Contributors

சம்மாந்துறை நிருபர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில்
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்
நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றது.

இந்த வகையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கான தடுப்பூசி வீடுகளுக்கு நேரடியாக சென்று செலுத்தும் நடவடிக்கை இன்று (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் 60 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் இடம் ,கிராம சேவகர் ரீதியாக பிரிக்கப்பட்ட அட்டவணையொன்றினை சம்மாந்துறை சுகாதார வைத்திய பணிமனை வெளியிட்டுள்ளதுடன் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களிக்கு சென்று தடுப்பூசி பெற முடியாதவர்களின் தகவலை கிராம சேவகரிடம் வழங்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team