சம்மாந்துறையில் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் (Photos) - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் (Photos)

Contributors

கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, பாடசாலை ஊடாக டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் பிரகாரம் இன்று 29.11.2013 ஆந் திகதியன்று வெள்ளி காலை 9.00 – 10.00 மணிவரை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதனை அப் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம் அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அத்துடன் இந் நடவடிக்கையில் ஆசிரியையான எஸ்.எஸ். ஜாரியா, கட்டுறு ஆசிரியையான செல்வி எம். பாத்திமா ஸப்னா ஆகியோர் முன்னின்று இச் செயற்திட்டத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல பெற்றோர்கள் கலந்து சிரமதானப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் இப்பாடசாலைச் சேர்ந்த பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் சேர்ந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமொன்றை நடாத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் – ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்

sammanthurai2

 

sammanthurai

Web Design by Srilanka Muslims Web Team