சம்மாந்துறையில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்..!

Contributors


(செ.தேன்மொழி)

அம்பாறை – சம்மாந்துறை பகுதியின் வளத்தாபிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான வடித்தலில்போது பீப்பாய் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை, சட்டவிரோதமான மதுபான வடித்தலின்போது, பீப்பாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் காயமடைந்திருந்தார்.

இதன்போது ஏகாம்பரம் தங்கவேல் எனப்படும் நபர் உயிரிழந்துள்ளதுடன், தர்மலிங்கம் அசோகன் எனப்படும் நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை , சம்பம் இடம்பெற்ற இடத்தை குற்றவியல் ஸ்தல பரிசோதகர்கள் பரிசோதனை செய்துள்ளதுடன், இது தொடர்பில் விசேட நிபுணர்களின் கருத்துகளும் ஆராயப்படவுள்ளன.

உயிரிழந்த நபரின் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதற்கு பின்னர் சடலம் உறவினர்களுக்கு கையளிக்கப்படும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team