சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நூறாவது இலவச கண்புரை சத்திரசிகிச்சை வெற்றி..! - Sri Lanka Muslim

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நூறாவது இலவச கண்புரை சத்திரசிகிச்சை வெற்றி..!

Contributors

சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சைப்பிரிவு தனது 100வது இலவச கண் புரை (Cataract) சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றி அண்மையில் சாதனை படைத்துள்ளது.

இதனை பாராட்டுமுகமாக ஏற்பாடாகிருந்த நிகழ்வில் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதியர் மற்றும் சுகாதார உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் போது வைத்தியசாலை சார்பாகவும் பிரதேச மக்கள் சார்பாகவும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம் ஆசாத் அவர்கள் கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அமில ஐயரத்னவுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்று உள்ள இந்த காலப்பகுதியில் அதற்குரிய தொற்றுத்தடுப்பு முறைகளை முறையாகப் பின்பற்றி,மிகக் குறைந்த ஆளணி மற்றும் உபகரணங்களுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கு கண் சிகிச்சையை சேவைகளை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தொடர்ந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது .

Web Design by Srilanka Muslims Web Team