சம்மாந்துறை; இலவசமாக கத்னா செய்து வைக்கும் நிகழ்வு - Sri Lanka Muslim

சம்மாந்துறை; இலவசமாக கத்னா செய்து வைக்கும் நிகழ்வு

Contributors

-அப்துல் ஜப்பார்-
சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறைப் பிரதேசத்தின் சென்னல் கிராமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை சென்னல் கிராமம் சனசமுக கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, நம்பிக்கையாளர் சபையின் உபதலைவர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.முஸ்தபா, செயலாளர் ஓய்வு பெற்ற கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.சலீம், பிரதேச சபை உறுப்பினர் றியால், கிராம உத்தியோகத்தர் ஐ.எல்.பரீட், பொறுப்பு நம்பிக்கையாளர் ஏ.பி.முகைதீன்பாவா உட்பட பலர் கலந்த கொண்டனர்.(ml)

Web Design by Srilanka Muslims Web Team