சம்மாந்துறை கொரோனா பாதுகாப்பு செயலணியுடன் இணைந்து கள பணியாற்ற இளைஞர்கள்! - Sri Lanka Muslim

சம்மாந்துறை கொரோனா பாதுகாப்பு செயலணியுடன் இணைந்து கள பணியாற்ற இளைஞர்கள்!

Contributors

சம்மாந்துறை – ஐ.எல்.எம். நாஸிம் 
சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார நடைமுறை விழிர்ப்புணர்வுகளை வழங்குவதற்காக சுகாதார தரப்பினர்களுடன் இணைந்து இளைஞர்களும் செயற்படுவதற்காக நேற்று (04) இளைஞர்களுக்குரிய கொரோனா பாதுகாப்பு அங்கிகளும் , செயலணி அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் சம்மாந்துறையில் இடம் பெற்றது.


 இந்நிகழ்வில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுனண் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சம்மாந்துறை  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  ஆகியோரின் கண்காணிப்பில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக்  நெறிப்படுத்திலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  தலைமையிலான இளைஞர் குழு, பொலிஸார் ,பாதுகாப்பு படையினர் இணைந்து சம்மாந்துறை  பிரதேசத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்துமுகமாக பொது இடங்களுக்கு தினமும்  இரவு 10.00 மணிவரை களவிஜயம் மேற்கொள்ள உள்ளனர்.


இதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கெதிராக உடன் கொவிட்-19 தொற்றுப் பரிசோதனையும்  மேற்கொள்ளவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.


வெசாக் மற்றும் நோன்பு பெருநாள் பண்டிகை காலம் என்பதனால் மக்கள் புத்தாடைகள் மற்றும் பண்டிகை கால கொள்வனவில் சம்மாந்துறை  வர்த்தக நிலையங்களில் பரபரப்பாக இயங்கிவருவதனால் சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team