சம்மாந்துறை பள்ளிவாசல்களில் சுகாதார வழிமுறைகளை பேணும் கண்காணிப்பில் சுகாதார தரப்பினர் !! - Sri Lanka Muslim

சம்மாந்துறை பள்ளிவாசல்களில் சுகாதார வழிமுறைகளை பேணும் கண்காணிப்பில் சுகாதார தரப்பினர் !!

Contributors

ஐ.எல்.எம். நாஸிம், நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேச பள்ளிவாசல்களில் சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசங்கள் அணிதல், தொழுகை விரிப்புக்கள் உள்ளதை உறுதிப்படுத்தல் போன்றவற்றை அமுல்படுத்த சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் ஆலோசனையின் கீழ் பொதுச்சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். றாஸிக் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கள விஜயம் செய்து பார்வையிட்டதுடன். சுகாதார வழிமுறைங்களை பின்பற்றாதோர்களை வீடுகளுக்கு திருப்பியனுப்பி சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தொழுகைக்கு வருமாறு திருப்பி அனுப்பிவைத்தனர்.

உலகில் பரவலாக பரவிவரும் கொரோனா தொற்று இலங்கையிலும் வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் கடுமையான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை வலியுறுத்தி வருகிறது. இந்த செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டுசெல்ல முடியுமென சுகாதார தரப்பு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team