சம்மாந்துறை பஸ் டிப்போ இளைஞர்கள் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அழைப்பு..! - Sri Lanka Muslim

சம்மாந்துறை பஸ் டிப்போ இளைஞர்கள் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அழைப்பு..!

Contributors
author image

Editorial Team

சம்மாந்துறையின் சொத்தான போக்குவரத்துச் சாலையினை (பஸ் டிப்போ – Bus Depot) மீட்டெடுக்கும் போராட்டத்தில் இறங்கியுள்ள இளைஞர்களின் போராட்டத்தில் பங்கெடுப்போம்..!

1998ம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த மர்ஹூம் யு.எல்.எம். முகைதீன் அவர்களினால் கொண்டு வரப்பட்ட நமது ஊரின் பழமையான சொத்தான பஸ் டிப்போவானது தற்போது கல்முனை சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பஸ் டிப்போவானது ஆரம்பத்தில் 3 பேருந்துகளுடனும், 10 ஊழியர்களுடனும் இயங்கி வந்ததோடு தற்போது 19 பேருந்துகளுடனும், 87 ஊழியர்களுடனும் இயங்கும் அளவுக்கு பாரிய வளர்ச்சியடைந்து சம்மாந்துறை மக்களுக்கு பாரிய அளவில் பயண்பட்டு வந்திருக்கின்றது.

இத்தகைய பேஸ் டிப்போவானது நமதுாரை விட்டு கைநழுவி சென்றமையானது வேதனையான விடையமாக உள்ளது. இதனை மீட்டெடுக்கும் போராட்டத்தில் தற்போது நமது ஊர் இளைஞர்கள், நலன் விரும்பிகள் ஈடுபட்டுள்ளனர் இவர்களோடு சம்மாந்துறை மக்களாகிய நாம் அனைவரும் கைகோர்த்து அதனை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.

நாளை (2021-04-05) சம்மாந்துறை போக்குவரத்துச் சாலைக்கு முன்பாக காலை 8.30 மணிக்கு இடம் பெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு, எமது ஊர் சொத்தை மீட்டெடுக்க இளைஞர்களோடு கைகோர்ப்போம்.

ஐ.எல்.எம். மாஹிர்,
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.

– ஊடகப் பிரிவு-

Web Design by Srilanka Muslims Web Team